search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிடர் மேலாண்மை பயிற்சி"

    பேரிடர் மீட்பு பயிற்சியின்போது கல்லூரி மாணவி அடிபட்டு இறந்ததையடுத்து, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். #CoimbatoreStudent #Logeshwari #TNCM
    சென்னை:

    கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆபத்து காலங்களில் கட்டிடங்களில் இருந்து குதித்து உயிர்தப்புவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

    இதற்காக, கல்லூரி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது.



    இந்த பயிற்சியில் பங்கேற்று, 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவி லோகேஸ்வரி முதல் மாடியில் உள்ள ஸ்லாப்பில் அடிபட்டு இறந்துபோனார். மாணவியை மாடியில் இருந்து குதிப்பதற்கு தயார்படுத்திய பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த கோர விபத்து தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முறையான பயிற்சி இன்றி மாணவிகளை வைத்து பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  

    மாணவியை பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக, அவருக்கு முறையான பயிற்சி அளித்தார்களா? விபத்துக்கு காரணமானவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது? எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சிகளை எவ்வாறு முறைப்படுத்துவது? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    மாணவ மாணவிகளுக்கு பேரிடர் பயிற்சி அளித்தது தவறு என்றும், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியது குறிப்பிடத்தக்கது. #CoimbatoreStudent #Logeshwari #CollegeStudentDies #NDRF #TNCM

    எனது மகளை அனாவசியமாக தள்ளிவிட்டு அநியாயமாக கொன்று விட்டனர் என்று மாணவி லோகேஸ்வரியின் பெற்றோர் கூறினர்.
    கோவை:

    மாடியில் இருந்து தள்ளி விட்டு இறந்த மாணவி லோகேஸ்வரி உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தந்தை நல்லா கவுண்டர் கூறியதாவது-

    நேற்று காலை எனது மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதாக எதுவும் சொல்லவில்லை.

    எனது மகள் தவறி கீழே விழுந்த சம்பவம் மதியம் 3 மணிக்கு நடைபெற்று உள்ளது. ஆனால் மாலை 5 மணி வரை கல்லூரி நிர்வாகம் சார்பில் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

    வேறு நபர் மூலம் தான் இதனை நான் தெரிந்து கொண்டேன். எனது மகளை அனாவசியமாக தள்ளிவிட்டு அநியாயமாக கொன்று விட்டனர்.

    இது தொடர்பாக பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆலாந்துறை போலீசில் புகார் தெரிவித்து உள்ளேன்.

    இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.

    நேற்று காலை எனது மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதாக எதுவும் கூறவில்லை.

    எனது மகள் இறந்த தகவல் சக மாணவி மூலம் தான் எங்களுக்கு தெரிய வந்தது.

    அவள் அப்படி இறந்தாள்? இப்படி இறந்தாள் என தான் கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறினார்கள். எப்படி இறந்தாள் என யாரும் தெரிவிக்கவில்லை. வேறு ஒருவர் மூலம் தான் அவர் இறந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர். #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போதோ கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி பெறுவதற்காக மாணவிகள் 2-வது மாடியில் நின்றுகொண்டு இருந்தனர். கீழே மாணவிகளை காப்பாற்றுதவற்காக சிலர் வலையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

    இந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி (வயது 19) என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார். இவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டினார். அப்போது மேலே நின்றுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் தைரியமாக குதி என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

    ஒருகட்டத்தில் மாணவியின் கையைப் பிடித்து கீழே குதிக்கவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்தது. இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர்.



    காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.#CoimbatoreStudent #Logeshwari




    கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    கோவையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இந்நிலையில், அந்தக் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் சார்பாக, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றிருக்கிறது.  அந்த கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த  லோகேஸ்வரி  என்ற மாணவி, கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார். மாணவி குதிப்பதற்கு முன்னதாக பயிற்சியாளர் அவரை கீழே தள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மாணவி எதிர்பாராத விதமாக சன்ஷேடில் மோதி கீழே விழுந்தார். அவருடைய தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  #CoimbatoreStudent #Logeshwari #tamilnews
     
    ×